24 மணி நேரத்தில் 3,242 போலீசார் பணியிட மாற்றம் !! அதிரடி உத்தரவு!!

 
போலீஸ்

.கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கர்நாடகாவில் நடந்த எஸ்.ஐ. தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இது சம்பந்தமாக எழுந்த புகாரின் அடிப்படையில் 55 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த மோசடியில் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்ததால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு நிலவியது. இது குறித்து விசாரணை நடத்தியதில், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருவதால் அவர்கள் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸ்

எனவே இதனை தடுக்கும் வகையில், போலீஸ் துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன் முதல்கட்டமாக போலீஸ் கமிஷ்னரேட் பகுதியில் பணியாற்றும் போலீசார் சிலருக்கு அவர்களது பணிக்காலம் குறைந்த பட்சம் 6 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகாலமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பெங்களூரில் கணிசமான எண்ணிக்கையில் போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் புதிய விதிமுறைப் பட்டியலையும் போலீஸ் துறை தயார் செய்துள்ளது.

மகளிர் போலீஸ்
இதன்படி பெங்களூரில் மொத்தம் 3,242 போலீசார் ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டி.ஜி.பி.சலீம் அகமது இந்த பணியிடமாற்றத்திற்கான உத்தரவுகளை அதிரடியாக பிறப்பித்தார். இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் ஏட்டுகள் 1,749 பேரும், 1,287 தலைமை ஏட்டுகளும், 43 எஸ்.ஐக்களும், 163 இன்ஸ்பெக்டர்களும் இந்த பட்டியலில் அடங்குவர். விரைவில் பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும், அவற்றை கவுன்சிலிங் மூலம் செய்து முடிக்க வேண்டும் எனவும் தனது உத்தரவில் டி.ஜி.பி. சலீம் அகமது தெரிவித்துள்ளார். பெங்களூரில் ஒரே நாளில் இத்தனை எண்ணிக்கையிலான போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பதால் சட்டம்& ஒழுங்கு குறித்து பல்வேறு சர்ச்சைக் கருத்துகள் எழுந்துள்ளன

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web