மறுவாழ்வு மையத்தில் 35 பேர் தப்பியோட்டம் ... போலீஸ் தீவிர விசாரணை!
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் தனியார் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மறுவாழ்வு மையத்தில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் இன்று அதிகாலை மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சிகிச்சை என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையத்தில் துன்புறுத்தல் சம்பவங்கள் நடைபெற்றதா? வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
