பெண்களுக்கு 35% இடஒதுக்கீடு.. முதல்வர் அதிரடி !!

 
பெண்கள்

விரைவில்  பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. அத்துடன் சில மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ள நிலையில்  மத்திய மாநில அரசுகள் தாராளமாய் திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.  அந்த வகையில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம்  மாநிலங்களில்  நடப்பாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், தேசிய கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.


 


 மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த 3 மாத காலத்திற்குள் தேர்தல் வரவுள்ள நிலையில்  பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து பெண்களுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் முழுவதுமே   சுமார் 2.6 கோடிக்கும் அதிகமான பெண் வாக்காளர்கள் உள்ளனர்.  அவர்களை கவர்வதற்காக அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை இரு கட்சிகளும் தொடர்ந்து அறிவித்து  வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில்   நாடாளுமன்றத்தில் 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகம் செய்திருந்தது.

மத்திய பிரதேசம்


இதன் ஒரு பகுதியாக மத்திய பிரதேச மாநில பெண் வாக்காளர்களை கவரும் வகையில் மாநிலத்தில் உள்ள அரசு பணிகளில், பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து   மகளிர் நியமனத்திற்கான சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து, வனத்துறை தவிர்த்து அனைத்து அரசு துறைகளிலும் பெண்களுக்கு 35 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார் இந்த அறிவிப்பு அந்த மாநில பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web