பெண்குழந்தைகளின் உயர்கல்விக்கு மாதம் ரூ35000 உதவித்தொகை... மத்திய அரசு அதிரடி!

 
சாவித்ரிபாய் பூலே திட்டம்

 
பெண்குழந்தைகளின் வளர்ச்சிக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில்  சாவித்திரிபாய் ஜோதிராவ் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம்  ஒரு வீட்டில் ஒன்று அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டும் இருப்பின் பலன் பெற முடியும்.  பெண்குழந்தைகளின் படிப்பு செலவிற்கு பெற்றோருக்கு கை கொடுக்கும் வகையில்  மத்திய அரசின் சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் பெண்குழந்தைகளுக்கு  பல நன்மைகளை வழங்குகின்றது. அதன்படி இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து 5   ஆண்டுகளுக்கு அந்த பெண்ணுக்கு இச்சலுகைகள் வழங்கப்படும்.

சாவித்ரிபாய் பூலே திட்டம்

 ஒரு வீட்டில் ஒரே ஒரு பெண்குழந்தைக்கு மட்டுமே இந்த வாய்ப்பு.  ஆண் பிள்ளைகளுக்கு இத்திட்டத்தில் சேரமுடியாது.  குடும்பத்தில் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தால் அவர்களில் ஒருவருக்கு மட்டுமே இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.  பெண்குழந்தைகள்   மேல்படிப்பில் பயனடையும் வகையில்   மத்திய அரசு அவருக்கான சலுகைகளை வழங்கும். இத்திட்டத்தில் சேர ரூ 100 மதிப்புள்ள முத்திரைத்தாளை உறுதிமொழி பத்திரமாக பெற்றோர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவை   மாஜிஸ்திரேட் அல்லது தாசில்தார் வகுப்பு அரசு ஊழியர்களால் சான்று அளிக்கப்பட வேண்டும்.  உதவி கோரும்   பெண்ணின் பெயரில் ஆதார், வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் கட்டாயம் இருக்க வேண்டும்.

கல்லூரி மாணவிகள்

இத்திட்டத்தில் சேரும் ஜூனியர்  மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு   மாதம் ரூ31000 உதவித்தொகை வழங்கப்படும். அதுவே சீனியர் மாணவிகளுக்கு  மாதம் ரூ35000 வழங்கப்படும். அதே போல் மாற்று திறனாளி மாணவிகளுக்கும் மாதம் ரூ35000  வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுது. இந்த திட்டத்தில் சேர தகுதியுடைய பெண்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி அல்லது நிறுவனத்தில் PhD, அதுவும் முழு நேரமாக பயில வேண்டும். பகுதி நேரமோ அல்லது தொலைதூர PhD சேர்க்கைக்கு இத்திட்டம் பொருந்தாது. பெண்ணின் வயது 40திற்குள்ளாக இருக்க வேண்டியது அவசியம்.   எஸ்சி/எஸ் டி/ஓ பி சி மற்றும் PWD வகுப்பினர்களுக்கு 45 வயது வரை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.  NACC சான்றிதழ் பெற்ற மத்திய மாநில பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் பிஎச்டி செய்யும் போது இந்த உதவித் தொகையினை பெற்றுக்கொள்ளலாம் என்பது  குறிப்பிடத்தக்கது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web