3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள்!! எப்படி விண்ணப்பிப்பது?! முழு தகவல்கள்!!

 
காவலர்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படுகிறது. இதில் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் (Constables, Gr.II ) (மாவட்ட/ மாநகர ஆயுதப்படை) ஆண்கள் 1,526 பேரும், பெண்கள் 654 காலிபணியிடங்களும் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

போலீஸ்

மேலும், இரண்டாம் நிலைக் காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் மொத்தம் 1,091 காலிபணியிடங்களும், சிறைத்துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர் (Jail Warders)  பணியிடங்களுக்கு ஆண்கள் 153, பெண்கள் 08 காலிபணியிடங்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் 120 தீயணைப்பாளர் (Firemen)  காலிபணியிடங்கள் என மொத்தம் 3,552 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அவற்றில் 5 சதவீத முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே அப்பணியிடங்களை நிரப்பிட 7.7.2019-க்கு பின்னர் பிறந்த 47 வயதுபூர்த்தியாகாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.   ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெற உள்ள படை வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஓராண்டு காலத்திற்குள் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ்

தகுதியுள்ளவர்கள் வருகிற 15.08.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் தற்போதைய படைவீரர்கள் தாங்கள் விண்ணப்பித்த விபரத்தை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு கண்டிப்பாக தெரிவித்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அல்லது உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன் அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web