உஷார்... ஒரே நாளில் 36 பேர் மருத்துவமனையில் அனுமதி.. நிரம்பி வழியும் டெங்கு வார்டுகள்!!

 
டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

தமிழகத்தின் பல பகுதிகளில் பகலில் கொளுத்தும் வெயில் மாலையில் சாரல் மழை என காலநிலை மாறியுள்ளது. இதனால் பல பகுதிகளில் பூமி குளிர்ந்துள்ளன. அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழைக்கால நோய்களும் வரிசைக்கட்டத் தொடங்கிவிட்டன. அந்த வகையில் சாதாரண சளி இருமல் காய்ச்சலோடு தற்போது டெங்குவும் தீவிரமாக பரவி வருகிறது.

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

சமீபத்தில் சென்னையை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.  இதனையடுத்து சுகாதாரத் துறை சார்பிலும் மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு  வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.   தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது.  

டெங்கு

செப்டம்பர் மாத தொடக்கம் முதல்  தற்போது வரை 200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 36 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் 280 மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பரிசோதனை  செய்யபட்டதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web