குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு 3வது இடம்...!

 
சுதந்திர தின விழா கொண்டாட்டம்

இந்தியாவின் 75 வது  குடியரசு தின விழா  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.  இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்து கொண்டனர். ராணுவத்தின் பிரம்மாண்ட வாகனங்கள், ராணுவத்தின் மிடுக்கான அணிவகுப்புகள் இடம்பெற்றன.

குடியரசு   தின விழா கொண்டாட்டம்


குடியரசு தின விழாவின் போது அரசுத் துறைகளின் நலத்திட்டங்கள், சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில்   அலங்கார ஊர்திகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. தமிழ்நாடு உட்பட 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் கலந்து கொண்டன.   இதில், குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட   தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது.

குடியரசு தின விழா

இந்த அலங்கார ஊர்தி  10ம் நூற்றாண்டு சோழர் காலக் குடவோலை முறையை மையப்படுத்தி தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி உருவாக்கப்பட்டு, ராஜ்பாதையில் ஊர்வலம் சென்றது.
மாநில  வாரியான பட்டியலில் ஜூரி தேர்வில் ஒடிசா முதலிடம், குஜராத் 2வது இடத்தில் இருந்தது.  தேர்வு அடிப்படையில் குஜராத் முதலிடமும், உ.பி. 2ம் இடம், ஆந்திராவுக்கு 3வது  இடத்தையும்  பிடித்துள்ளன.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web