மீனவரை வெட்ட முயன்ற 4 பேர் கைது... பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக மீனவரை வெட்ட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக சம்பவத்தன்று தகராறு நடைபெறுவதாக வடபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், கீழ அழகாபுரியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை 4 பேர் கும்பல் அரிவாளால் வெட்ட முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அங்கு ஆயுதங்களுடன் நின்றிருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் தூத்துக்குடி பூபாலராயர்புரத்தைச் சேர்ந்த மரியபிரான்சிஸ் ரேவந்த் (28), ஜார்ஜ் ரோடு பகுதியை சார்ந்த இருதய ஸ்டீபன் ராஜ் (31), கிருஷ்ணராஜ புரத்தைச் சேர்ந்த பெர்னிக் (23) மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் (19) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
