அதிர்ச்சி... வண்டலூர் பூங்காவில் யானை தந்தம் திருடிய 4 பேர் கைது!
தமிழகத்தில் சென்னையை அடுத்துள்ள வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்களை, பூங்காவில் தற்காலிக பணியாளராக வேலைப் பார்த்து வந்த ஒருவர் கடந்த மாதம் 25ம் தேதி திருடியதாக தெரிய வந்தது.
அதன் பின்னர், யானை தந்தம் திருடப்பட்டது குறித்து தமிழ்நாடு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவினரும், தாம்பரம் வனச்சரக அலுவலகமும் இணைந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி அருகே 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் முழுமையாக வளர்ந்த யானையுடைய தந்தங்கள் கிடையாது. ஒரு அடிக்கு மேல் அளவுள்ள ஒரு தந்தம் என்றும், மற்றொன்று பெண் யானையின் தந்தம் எனவும் தெரிய வந்துள்ளது. போலீசாரின் விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த ஊழியர் அப்பு (எ) சதீஷ் என்பவரிடம் இருந்து இந்த தந்தங்களை பெற்றதாக பிடிபட்ட 4 பேரும் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!