நாளை மறுநாள் 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

 
விடுமுறை

 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. நாளை உருவாகப்போகும் புயலால் புதுச்சேரியில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!! கனமழை எதிரொலி!!

அந்த வகையில் டிசம்பர் 4ம் தேதி  நாளை மறுநாள் இந்திய வானிலை ஆய்வுமையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மாணவர்களின் பாதுகாப்பு  கருதி  காஞ்சிபுரம் , திருவள்ளூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி   மாவட்டங்களில்  அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர்.  
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை,  சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 510 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.  மேலும், இது நெல்லூரிலிருந்து தென் கிழக்கு திசையில் 630 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து   710 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.  மணிக்கு 18 கி.மீ வேகத்தில்  நகரும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது.  

விடுமுறை

ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல டிசம்பர் 4ம் தேதி புயல் கரையைக் கடக்கும் எனவும்,  நாளையும், நாளை மறுநாளும் கடலோர மாவட்டங்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு  மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, மாவட்டங்களில்  வடகிழக்கு பருவமழை  காரணமாக  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில்   கோட்டார் தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web