4 மருத்துவமனைகளை மூட உத்தரவு!! சிறுமி கருமுட்டை விவகாரத்தில் அமைச்சர் அதிரடி!!!

 
மா.சுப்பிரமணியன்

ஈரோடு மாவட்டத்தில் சிறுமிக்கு தெரிவிக்காமல் அவருடைய  கருமுட்டையை  விற்பனை செய்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  கருமுட்டை விற்பனையில்  சம்பந்தப்பட்ட 4 மருத்துவமனைகளையும் உடனடியாக  மூட உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

கருமுட்டை

அதற்கு முன் தற்போது இங்கு சிகிச்சை பெற்று வரும் அனைத்து உள்நோயாளிகளையும் வரும் 15 நாட்களுக்குள் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். மேலும், சிறுமி கருமுட்டை வழக்கில் விசாரணையின் இறுதி அறிக்கையை குழு சமர்ப்பித்துள்ளது. விசாரணை அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களும் மருத்துவமனைகள் முழுவதுமாக தரவில்லை. அறிக்கையில் குறிப்பிட்ட  தகவல்கள் படி முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து 2 தனியார் மருத்துவமனைகள் நீக்கப்படும். கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கருமுட்டை
அத்துடன் சிறுமியின் உண்மையான பெயர், வயதை மறைத்து கருமுட்டை தானம் பெறப்பட்டுள்ளது. ஒரே சிறுமியிடம் இருந்து ஒவ்வொரு  மாதமும்  பலமுறை கருமுட்டையை எடுத்திருக்கிறார்கள். பெரும் அதிர்ச்சியை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் மேலும் இது போன்ற தவறுகள் நீடிப்பதை தடை செய்ய வேண்டும். இது குறித்து விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web