ரூ.44,000 கோடி செலவில் 4 நீரேற்று மின் திட்டங்கள் .. மத்திய அரசு ஒப்பந்தம்!

 
அணை நீரேற்று

நான்கு நீரேற்று மின்  திட்டங்களை 44,000 கோடி ரூபாயில் செயல்படுத்த, மத்திய அரசின், நேஷனல் ஹைட்ரோ  கார்ப்பரேன் என்றழைக்கபடும் தேசிய நீர்மின் கழகத்துடன், அம்மாநில அரசு புரித்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மின் நிலையத்தில், ஒரு முறை மின் உற்பத்திக்கு பயன்படுத்திய தண்ணீர், அதிக திறன் உடைய மோட்டார் பம்ப் வாயிலாக மீண்டும் அணைக்கு கொண்டு செல்லப்படும். அந்த தண்ணீரை  மீண்டும் பயன்படுத்தி தேலைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் மின் உற்பத்தி செய்யலாம்.

என்.ஹெச்.பி.சி.

இது குறித்து, தேசிய நீர் மின் கழக மேலாண் இயக்குனர் ஆர்கேவிஷ்னோய் கூறுகையில் 44,000 கோடியில் அமைவிருக்கும் இத்திட்டம் வாயிலாக 7000 பேருக்கு நேரடியாகவும் மறை முகமாகவும் வேலை கிடைக்கும் என்றார். இதுதவிர,  சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய  திறனை, ஐந்து லட் சம் மெகா வாட்டாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதேசமயம் நீர்மின் நிலையத்தில், ஒருமுறை மின் உற்பத்தி செய்து அதில் புதுப்பிக்கத்தக்க வகையில் பயன்படுத்திய தண்ணீரை மீண்டும் பயன்படுத்தவும் திட்டம் உள்ளாதாக தெரிவித்தார்.

மின்நிலையம்

மஹாராஷ்டிர் துணை முதல்வர் தேவேந்திர பட்னலில் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக்வும்  எரிசக்தி துறை உயர் அதிகாரிகளும் குழுவினர்களும் உடனிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார், இன்றைய வர்த்தகத்தில் என்.ஹச்.பி.சி பங்கின் விலை தற்பொழுதைய நிலவரப்படி கிட்டத்தட்ட மூன்று சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 45.25க்கு பி.எஸ்.சியில் வர்த்தகமாகி வருகிறது.

ஒரு புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web