அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலி

 
வாகனங்கள்
 

ஓசூர் அருகே சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த பல வாகன விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். சானமாவு வனப்பகுதி அருகே இரண்டு கார்கள், இரண்டு லாரிகள் மற்றும் ஒரு மினி லாரி உள்ளிட்ட மொத்தம் ஐந்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ்

பேரண்டபள்ளி வனப்பகுதியில் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து முன் சென்ற மினி லாரியுடன் மோதியதில் பின்னால் வந்த லாரியும் அந்த வாகனங்கள் மீது மோதியது. இதனால் தொடர்ச்சியாக ஐந்து வாகனங்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

போலீஸ்

இந்த விபத்தில் காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவராக சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த முகிலன் (30) அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்ற மூவரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?