லடாக்கில் பயங்கர கலவரம் 4 பேர் பலி; 60 பேர் படுகாயம்...ஊரடங்கு உத்தரவு அமல்!
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் திங்கட்கிழமை அன்று வன்முறையாக வெடித்தது. இதில் குறைந்தபட்சம் 4 பேர் உயிரிழந்த நிலையில், 60 பேர் வரை காயமடைந்துள்ளனர். வன்முறையில் உள்ளூர் பாஜக அலுவலகம் மற்றும் ஒரு வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் வகையில், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. போராட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
#LadakhProtest #lehladakh #lehprotest
— खुरपेंच का बाप (@Khurpench_Daddy) September 24, 2025
🚨 Ladakh people had been protesting for so long,
yet no mainstream media showed it.
But as soon as violence happened at the BJP office, all the mainstream media started covering it.
Why is this? Just to defame the protesters or something… pic.twitter.com/ZGpQZlQa64
லே அபெக்ஸ் பாடி இளைஞர் பிரிவால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க நடத்தப்பட்டு வருகிறது. "லடாக்கின் நான்கு பிரச்சினைகள் குறித்து நாங்கள் நீண்ட காலமாக ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறோம். வன்முறைச் செயல்களுக்கு வழிவகுத்த சில சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறையின் போது, 2-3 இளைஞர்கள் எங்கள் லட்சியத்திற்காக தியாகிகளாகியுள்ளனர். இந்த இளைஞர்கள் செய்த தியாகங்களை வீணாக்க விடமாட்டோம் என்று லடாக் மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்," என லடாக்கின் உச்ச அமைப்பின் தலைவர் துப்ஸ்தான் ஸ்வாங் தெரிவித்துள்ளார்.
மாநில அந்தஸ்தை வலியுறுத்தி செப்டம்பர் 10 முதல் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரில் இருவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை அடுத்து, முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட கல்வீச்சு தான், ஒட்டுமொத்த வன்முறைக்கும் காரணமாக கூறப்படுகிறது. உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட கொண்ட வாங்சுக், தனது ஆதரவாளர்கள் வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். "கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வரும் எங்கள் அமைதியான போராட்டத்தை இந்த சம்பவம் சீர்குலைத்துள்ளது. GEN - Z இந்தப் போராட்டம் வேலையின்மை மற்றும் பிற பெரிய பிரச்சினைகளால் மட்டுமே ஏற்பட்டது. இன்றுGEN - Zன் வெறித்தனத்தைக் கண்டோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர்களின் விரக்தியை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் அவர்களின் போராட்ட முறையை நான் கண்டிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
It's heartbreaking - A peaceful land pushed to violence shows how deep the pain runs.
— Kaniz fatima (@kniz_fatimah) September 24, 2025
Ladakh has been crying for 6th Schedule for years. Instead of dialogue, we see bloodshed. Is it too much to ask the administration to listen rather than shoot? #Saveladakh #LadakhProtest pic.twitter.com/DI7OOiqGJY
வன்முறை குறித்து பேசிய ஜம்மு & காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, "தேர்தல் செயல்பாட்டில் எங்கள் மக்கள் பங்கேற்றனர். வெற்றி பெற முடியாமல் போனது பாஜகவின் துரதிர்ஷ்டம். இருப்பினும், இங்குள்ள மக்களை அதற்காக தண்டிக்க கூடாது. பாஜக அரசாங்கத்தை அமைக்காததால் மக்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இது மக்களுக்கு அநீதியானது. முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும்போது மட்டுமே மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்று கூறவில்லையே. மாநில அந்தஸ்துக்கு பாஜகவிடமிருந்து எதிர்ப்பு வருகிறது" என சாடியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
