வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!

 
வந்தே பாரத்

பீகார் மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் மோதி 4  பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பீகார் மாநிலம், புர்னியா மாவட்டத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்த போது வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலியாகியுள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த  நபர் சிகிச்சைக்காக புர்னியா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வந்தே பாரத்
புர்னியா சந்திப்பின் நிலைய மேலாளர் முன்னா குமார் கூறுகையில், கதிஹர்-ஜோக்பானி பிரிவில் அதிகாலை 4 மணிக்கு  இந்த சம்பவம் நடந்தது. இருட்டாகவும், வானிலை மேகமூட்டமாகவும் இருந்ததால், சிறுவர்கள் வேகமாக வந்த ரயிலை சரியான நேரத்தில் கவனிக்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.  

வந்தே பாரத்
இதனிடையே பலியானவர்களின்  குடும்பத்தினருக்கு முதல்வர் நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயம் அடைந்த நபர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் எனக் கூறினார். விபத்தில் பலியானவர்கள் 14-18 வயதுக்குட்பட்டவர்கள் எனவும்  கஸ்பா தொகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும்  கூறப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?