டெல்லி குண்டுவெடிப்பில் 3 மருத்துவர்கள் உட்பட மேலும் 4 பேர் கைது!

 
என்.ஐ.ஏ. என்ஐஏ அமலாக்கத்துறை

நவம்பர் 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிகுண்டு வெடித்து சிதறிய சம்பவத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சிகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதில் தேசிய புலனாய்வு முகமை (NIA) தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று தேசிய புலனாய்வு முகமை மேலும் நால்வரை கைது செய்துள்ளது. அதில் மூன்று டாக்டர்கள் அடங்கியுள்ளனர். அவர்கள் தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் என்று NIA தெரிவித்துள்ளது.

டெல்லி

கைதான நபர்களில் முஸாமில் ஷகீல், அதீல் அகமது ராதர், ஷாஹீன் சயீத் ஆகிய மருத்துவர்கள் அடங்கியுள்ளனர். மேலும் முஃப்தி இர்பான் அகமது வாகே  என்பவரும் கைது செய்யப்பட்டார். இது குறித்து NIA அதிகாரிகள் கூறுகையில், இந்த நால்வரும் தாக்குதலை வடிவமைப்பு அல்லது ஆதரவு அளித்தவர்களாக இருக்கலாம். அவர்கள் வீடுகளில் ஆயுதங்கள் மற்றும் ஆதாரபூர்வ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

டெல்லி

முன்பு கைது செய்யப்பட்ட சில சந்தேக நபர்களை NIA தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தும் நோக்கில் மாற்றிக் கொண்டுள்ளது. இந்த விசாரணை நாடு முழுவதும் பாதுகாப்பு சூழலுக்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?