புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி... பெரும் சோகம்!

 
விபத்து

கோவை அருகே செட்டிப்பாளையம் சிறுவாணி சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதியதில் நால்வர் பலியானனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சுயநினைவின்றி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆம்புலன்ஸ்

பேரூர் அருகே உள்ள எச்.பி. பெட்ரோல் பங்க் அருகே டாட்டா அல்ட்ராஸ் கார் சாலையோர புளியமரத்தில் மோதி நொறுங்கியது. இதில் காரில் இருந்த நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஷ் (21) மற்றும் பிரகாஷ் (22) ஆகியோர் பேரூரில் உள்ள கனகஸ்ரீ வாட்டர் வாஷ் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீஸ்

மேலும் மரணமடைந்த மற்ற இருவரும் சபரி (21), அகத்தியன் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில் உள்ளவர் பிரபாகரன் (19) என அறியப்பட்டுள்ளது. கார் மோதி நால்வர் பலியான இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!