அதிகாலையில் அதிர்ச்சி...நின்று கொண்டிருந்த ஈச்சர் வாகனத்தில் கார் மோதி 4 பேர் உடல் நசுங்கி பலி!
தமிழகத்தின் தலைநகர் சென்னை ஈசிஆரில் இன்று செப்டம்பர் 4ம் தேதி புதன்கிழமை கோர விபத்து ஒன்று ஏற்பட்டது. கோவளம் அருகே அடுத்த செம்மஞ்சேரியில் ஈச்சர் வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்தவாகனம் மீது அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஈச்சர் வாகனம் மீது திடீரென மோதியது.
இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் பலியாகி இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி பயணம் செய்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!