என்கவுன்டரில் 4 ரவுடிகள் சுட்டுக்கொலை!

 
என்கவுண்ட்டர்
 

பீகாரின் பிரபல ரவுடியான ரஞ்சன் பதக் கும்பல் சட்டசபை தேர்தலுக்கு முன் பெரிய குற்றச்செயலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, பீகார் காவல்துறை மற்றும் டெல்லி குற்றப்பிரிவு இணைந்து இன்று அதிகாலை 2.20 மணியளவில் டெல்லி ரோஹினி பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.சத்தீஸ்கர் நக்சலைட்

அப்போது காவல்துறையினரை நோக்கி ரஞ்சன் பதக் மற்றும் அவரது கூட்டத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுத்த காவல்துறை வீரர்கள் நடத்திய தாக்குதலில் ரஞ்சன் பதக், பிம்லேஷ் சாஹ்னி (25), மனிஷ் பதக் (33), அமன் தாக்கூர் (21) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

நக்சலைட்

காயமடைந்த நால்வரையும் காவல்துறையினர் உடனடியாக ரோஹினி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இவர்கள் அனைவரும் கொலை மற்றும் ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட குற்றவாளிகள் என டெல்லி குற்றப்பிரிவு துணை ஆணையர் சஞ்சீவ் யாதவ் தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!