டெங்குவால் 4 வயது சிறுமி பலி... 2 குழந்தைகள் கவலைக்கிடம்... பெற்றோர்களே உஷார்!!

 
அபிநிதி

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும் முன்னரே மழைக்கால நோய்கள் வேகமெடுக்க தொடங்கிவிட்டன. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் டெங்கு காரணமாக சென்னையில் ஒரு சிறுவன் பலியானான். இதனையடுத்து  அக்டோபர் 1ம் தேதி 1000 இடங்களில் டெங்கு காய்ச்சல் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.   ஆனால்  மழைக்காலம் ஆரம்பித்துளளதால். சளி, காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடனும் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

டெங்கு


இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம்  சிவராஜ்பேட்டை பகுதியில் வசித்து வரும் தம்பதி  மணிகண்டன் , சுமித்ரா. இவர்களுடைய 3  குழந்தைகளுக்கும் காய்ச்சல்.இதனால்  இவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் மூவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதில் 7 வயதான யோகலட்சுமி, 4 வயதான அபிநிதி, 8 மாத குழந்தை புருஷோத்தமன் ஆகியோருக்கு  செப்டம்பர் 23ஆம் தேதிமுதல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், யோகலட்சுமி மட்டும் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அழைத்து செல்லப்பட்டார்.

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..


அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகியோருக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிறப்பு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இரவு  4 வயதான அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிக்கப்பட்டு, அதில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தற்போது உயிரிழந்த சிறுமி அபிநிதி உடல் பெங்களூர்வில் இருந்து  சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யோகலட்சுமி மற்றும் புருஷோத்தமன் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web