ரிலாக்ஸ்... ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு 40 ஏசிகள்... இந்திய தூதரகம் அதிரடி!
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33 வது ஒலிம்பிக் 2024 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஒலிம்பிக் கேம்ஸ் கிராமத்தில் தங்கியுள்ள இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 40 குளிர்சாதனங்களை இந்திய தூதரகம் வழங்கியுள்ளது.
ஒலிம்பிக் 2024ல் இதுவரை இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.
அதிலும் துப்பாக்கி சுடுதலில் மட்டுமே இந்தியா பதக்கங்களை கைப்பற்றியிருக்கிறது. மற்ற போட்டிகளில் எல்லாம் இந்தியா தோல்வி அடைந்து வருகிறது. ஜூலை 26ம் தேதி தொடக்க விழாவுடன் கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்திய வீரர்கள் தங்குவதற்கு வசதியாக பாரிஸில் ஒலிம்பிக் கிராமம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது அனைத்து வீரர்களுக்கும் ஏற்றதாக இல்லை எனத் தெரிகிறது. சில விளையாட்டு வீரர்கள், தங்குவதற்கு ஹோட்டல்களை தேட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சில விளையாட்டு வீரர்கள் வெப்ப அலைக்கு ஏற்ப தங்களது சொந்த உபகரணங்களை கொண்டு வந்துள்ளனர். அமெரிக்கா போன்ற சில நாடுகள் தங்களது விளையாட்டு வீரர்களுடன் கையடக்க ஏசிகளை அனுப்பியுள்ளன.
இதனைத் தொடர்ந்து இந்தியா தற்போது பிரான்சில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் கிராமத்திற்கு 40 ஏசிகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் அவர்கள் வசதியாக தங்குவதற்கும், ஓய்வு நேரத்தை ரிலாக்சாக அனுபவிக்கவும் முடியும். விளையாட்டு அமைச்சகம் SAI, IOA மற்றும் பிரான்சில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றுக்கு இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப் பிறகு போர்ட்டபிள் ஏசிகளை வாங்க முடிவு செய்தது. இதற்கு அனைத்து செலவுகளும் விளையாட்டு அமைச்சகத்தால் ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
