துறைமுகத்தில் 60 படகுகள் தீ விபத்தில் எரிந்து நாசம் ... கதறி துடிக்கும் மீனவர்கள்!

 
படகில் தீவிபத்து

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள  மீன்பிடித் துறைமுகத்தில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான படகுகள் தீயில் எரிந்து கருகி சாம்பல் ஆகின. விசாகப்பட்டினம் அருகே மீனவர்களின் படகுகளை நிறுத்தி வைப்பதற்காக தனிப்பட்ட  மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு ஒரு சில படகுகள் தீப்பிடித்து எரிந்தன. அப்போது காற்று பலமாக வீசியதால் மற்ற படகுகளுக்கும் தீ வேகமாக பரவியது.

படகில் தீவிபத்து

 

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை  அணைத்தனர்.இந்த தீவிபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்புக்கள் எதுவும் இல்லை.  அதே நேரத்தில்  40 மீன்பிடி படகுகள் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகின. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான படகுகள் தங்கள்  கண் முன்னே கருகியதை கண்ட மீனவர்கள் கதறி அழுதனர்.

படகில் தீவிபத்து

ஒவ்வொரு படகுக்கும் குறைந்தது ரூ40 லட்சம் செலவாகும் என மீனவர்கள் தெரிவித்தனர். அடையாளம் தெரியாத சிலர் படகுகளுக்கு தீ வைத்து இருப்பதாக    காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web