காருக்கு அடுத்து 40 செண்ட் நிலம்.. ஜிபி முத்து அதிரடி!!

 
ஜிபி முத்து

 'பிக் பாஸ்', 'குக் வித் கோமாளி'  நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ஜிபிமுத்து. இவர்  சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகள், அஜித்தின் ‘துணிவு’, சன்னி லியோன் நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ போன்ற திரைப்படங்களிலும் நடித்தவர். தற்போது பல திரைப்படங்களில்  பிசியாக நடித்து வருகிறார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு புது கார் வாங்கியபோது எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

ஜிபி முத்து


 பழைய கார் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்த ஜி.பி.முத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புதிதாக கியா கேரன்ஸ் காரை வாங்கி இருக்கிறார்.  பரம்பரையிலேயே புது கார் வாங்கிய முதல் ஆள் நான் தான் என நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.   ஜி.பி முத்து, அந்த புது காரில் தனது குடும்பத்தினருடன் ஜாலியாக ரைடு சென்ற காட்சிகளையும்  சமூக வலைதளங்களில்  பதிவிட்டிருந்தார். ஜி.பி முத்து வாங்கியுள்ள அந்த காரின் விலை ரூ.12 முதல் 15 லட்சம் இருக்கலாம்.  

ஜிபிமுத்து

தற்போது அவர்  சொந்த ஊரான தூத்துக்குடி உடையான்குடியில் சொந்தமாக நிலம் வாங்கி இருக்கிறார். ஜிபி. முத்து 40 சென்ட் நிலம் வாங்கி இருக்கும் நிலையில் அதில் இருக்கும் கருவேல மரங்களை வெட்டிவிட்டு அந்த இடத்தில் தோட்டம் அமைக்க போவதாக ஜி.பி.முத்து கூறியுள்ளார்.   ஜி.பி.முத்துவின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும்  தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web