மாதம் ரூ40செலுத்தினாலே போதும்... 2,00,000/-க்கான காப்பீடு !

 
பீமா யோஜனா

இந்தியா முழுவதும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆண்டிற்கு ரூ436 காப்பீட்டு தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு விபத்து காப்பீடு பெறலாம். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா என்ற இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதன் மூலம் வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைத்து இந்தியர்களும் பயனைப் பெறலாம்.கணக்கு தொடங்கி 45 நாட்களுக்கு பிறகு வாடிக்கையாளர் இந்த விபத்து காப்பீடை பெற தகுதியானவர் ஆகிறார்.  இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நிதிப் பாதுகாப்பை பெற முடியும்.

பீமா யோஜனா

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில், பாலிசிதாரர் மரணம் அடைந்தால், நாமினி அல்லது குடும்பத்தை சேர்ந்தவருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.   பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா விபத்து மரணம் அல்லது மொத்த நிரந்தர ஊனத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீடு தொகையை வழங்குகிறது. அல்லது  பகுதி ஊனத்திற்கு ரூ. 1 லட்சமும் விபத்து காப்பீடாக வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு மிக மிக  குறைவான பிரிமீயம் மட்டுமே செலுத்தி அதிக பலன்களை பெறுவது  தான் இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் .

பீமா யோஜனா

இத்திட்டத்தின் பயனைப் பெற ஆண்டுக்கு ரூ 436  பிரீமியம் செலுத்தினாலே போதும் அதாவது மாதம் ரூ40 மட்டுமே செலுத்தினால்  ரூ.2 லட்சம் காப்பீடு பெறலாம். இந்தியாவில்   18 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட அனைவருமே இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். ஒவ்வொரு ஆண்டும் இதனை புதுப்பிக்க வேண்டியதும் அவசியமாகிறது.  இதற்கான  பாலிசியை வங்கிக் கிளை அல்லது தபால் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.   இந்த காப்பீடு பெறுவதற்கு எந்த வித மருத்துவ பரிசோதனையும் செய்ய வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web