கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவிலிருந்து 4000 பக்தர்கள் ... !

 
கச்சத்தீவு

இந்தியாவின் எல்லை பிரச்சனைகளில் தமிழகத்திற்கு தீராத தலைவலியாக இருப்பது கச்சத்தீவு பிரச்சனை. இந்த பிரச்சனை தீவிரம் அடையும் போதெல்லாம் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுகின்றனர்.அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.இந்நிலையில் இருநாட்டு மக்களின் உறவை புனிதப்படுத்தும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருவதும் வழக்கம் தான். அந்த வகையில்  புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய, இலங்கை பக்தர்கள் கலந்து கொண்டு இருநாட்டு உறவை மேம்படுத்த நோக்கத்தோடு திருவிழா கொண்டாடி வருகின்றனர்.

கச்சத்தீவு

அந்த வகையில் நடப்ப்பாண்டில்  கச்சத்தீவு திருவிழா   பிப்ரவரி 23, 24ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையொட்டி  இலங்கை யாழ்ப்பாணம் மறை மாவட்ட அலுவலகத்தில் இருந்து சிவகங்கை மறை மாவட்ட அலுவலகத்திற்கும், ராமேஸ்வரம் பங்கு தந்தைக்கும் கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை இலங்கை அரசு  அனுப்பியுள்ளது. இதனையடுத்து கச்சத்தீவு திருவிழாவிற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கச்சத்தீவு புத்தர்


இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவில் இலங்கையிலிருந்து 4,000 பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4000 பக்தர்களும் என மொத்தம் 8000 பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் தமிழகத்தில் இருந்து 75 விசைப்படகுகளில் பக்தர்கள் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை   கொண்டு செல்லாமல் அரசு விதிமுறைகளை கடைபிடித்து வர வேண்டும் என  ராமேஸ்வரம் பங்கு தந்தை சந்தியாகு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web