வங்கிக் கணக்கில் ரூ4000/-? விவசாயிகள் உற்சாகம்!!

 
விவசாயி உதவித்தொகை

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் ரூ6000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும். 3 சம தவணைகளாக விவசாயிகளின் கணக்கிற்கு   டிபிடி மூலம்  செலுத்தப்படுகிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது .

farmers

இதனையொட்டி  இத்திட்டத்தின் தவணை பெரிய அளவில் அதிகரிக்கலாம் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி 50 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என  செய்திகள் வெளியாகி உள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை .   விவசாய அமைச்சகம் தனது பரிந்துரையை  பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளது.

விவசாயி உதவித் தொகை

ஒப்புதல் இருப்பில் விரைவில்  அமைச்சரவையில் கொண்டு வர முடியும் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்திட்டம்  செயல்படுத்தப்பட்டால் விவசாயிகள்  வங்கிக்கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் ரூ8000  முதல்  ரூ9000 வரை  நிதியாகப் பெறலாம்.இதுவரை 14 தவணைகள் விவசாயிகளின் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் விரைவில்  15வது தவணை வழங்கப்பட உள்ளது. திட்டத்தின் விதிகளின்படி, முதல் தவணை ஏப்ரல்-ஜூலைக்கும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் முதல் மார்ச் வரையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web