நாளை 41 மின்சார ரயில்கள் ரத்து.. பயணிகளின் கனிவான கவனத்திற்கு !!

 
கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் புறநகர் பகுதிகளில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வழித்தடங்களில் 41 புறநகர் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படும் என   தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்


 சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில்   கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையங்களில் 4 மணிநேர பராமரிப்பு பணிக்காக புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை காஞ்சி- கடற்கரை, கடற்கரை- தாம்பரம் மார்க்கத்தில் நாளை ரயில்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே புறப்படும் ரயில்கள் காலை 10.55 முதல்  பிற்பகல் ஒரு மணி வரை இயங்காது. 

ரயில்


நாளை அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி நாடு முழுவதும் விடுமுறை என்பதால் விடுமுறை நாள் அட்டவணைப்படி இயக்கப்படும்.  ஞாயிறு அட்டவணைப்படி, கடற்கரை, செங்கல்பட்டு, அரக்கோணம், சூலூர்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என தெற்குரயில்வே தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வழித்தடங்களில் 41 புறநகர் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!