நிலைமை மோசமாகி வருகிறது... சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள்.. கதறும் வீடியோ... !!

உத்தராகாண்ட் மாநிலத்தில் சில்கைரா பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு சுரங்கம் தோண்டும் பணியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த திடீர் நிலச்சரிவில் 41 தொழிலாளர்கள் இருந்த ஒரு பகுதி முற்றிலுமாக மூடிவிட்டது. இவர்கள் அனைவரும் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.இவர்களை மீட்பதற்கான பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 8 நாட்களை கடந்து 9வது நாளாக இந்த பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் அவர்களை தொடர்பு கொள்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது.
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Rescue team officials establish audio-visual contact with the workers trapped in the tunnel for the first time, through the pipeline and endoscopic flexi camera.
— ANI (@ANI) November 21, 2023
(Video Source: District Information Officer) pic.twitter.com/JKtAtHQtN4
அவர்கள் சிக்கிய தகவல் கிடைத்த உடனே உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்காக தண்ணீர் உணவு ஆகியவை பைப் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. 6 அங்குல குழாய் ஒன்றை தொழிலாளர்கள் இருக்கும் பகுதிக்கு செலுத்தி, அதன் மூலம் அவர்களுக்கு உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தொழிலாளர்கள் சிக்கி இருக்கும் பகுதிக்கு பைப் சென்றதையடுத்து அவர்களுக்கு உணவளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே தொழிலாளர்கள் அனைவரும் நலமாக உள்ளனர் என்பதை கண்டறிவதற்காக கேமரா மூலம் பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுடன் பேசிய அதிகாரிகள் அவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் இருக்குமாறு வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் பெரும் வைரலாகி வருகிறது. மிக விரைவில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என மீட்பு படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!