அம்..மாடியோவ்... ஒரே ஒரு எலியை பிடிக்க ரூ41000/-!! ரயில்வே அதிர்ச்சி தகவல்!!

 
ரயில்களில் எலி

இந்தியக்குடிமகன் ஒவ்வொருவரும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசின் செயல்பாடுகளையும், திட்டங்களையும் அறிய முடியும். மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் நகரில் வசித்து வருபவர் சந்திரசேகர் கவுர்.  சமூக ஆர்வலராக இருந்து வரும் இவர்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டெல்லி, அம்பாலா, மொராதாபாத், லக்னோ மற்றும் ஃபெரோஸ்பூர் உட்பட 5 பிரிவுகளில் செயல்பட்டு வரும்   வடக்கு ரயில்வேயில் எலிகளைப் பிடிப்பதற்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு எனக் கேள்வி எழுப்பியிருந்தார். 

ரயில்களில் எலி

அவர் கேட்ட தகவல்களுக்கு ஃபெரோஸ்பூர் மற்றும் மொராதாபாத் பிரிவுகள் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.  அம்பாலா மற்றும் டெல்லி பிரிவுகள் குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்து இருந்தன. ஆனாலும், அம்பாலா பிரிவு ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2023 வரை எலிகளைப் பிடிக்க ரூ. 39.3 லட்சம் செலவிட்டதாக தெரிவித்துள்ளது. லக்னோவை பொறுத்தவரை லக்னோ சென்ட்ரல் கிடங்கு கார்ப்பரேஷனுக்கு எலிகளைப் பிடிக்க 2019 முதல் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

எலி

அதன்படி ஒரு எலியை பிடிக்க  ரூ.41,000 ரயில்வே செலவிடுகிறது என பதில் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி பிரிவில்   பயணிகள் ரயில்களில் பூச்சி மற்றும் எலிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருப்பவரின் தகவலை அளித்துள்ளது.  ஒரே ஒரு எலியைப் பிடிக்க ரூ41,000 ஐ  ரயில்வே துறை செலவிடுகிறது என்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web