பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட 43 மாணவர்கள் மயக்கம்!! திருவண்ணமலையில் பரபரப்பு!!

 
மயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள படிஅக்ரகாரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 1 முதல் 8-ம் வகுப்பு வரை, சுமார் 175 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

மய்க்கம்

இதில், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான 61 மாணவர்களுக்கு நேற்று சத்து மாத்திரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மதிய உணவாக சத்துணவு மற்றும் முட்டையும் உட்கொண்டனர்.

படி அக்ரஹாரம்

இந்நிலையில் சத்து மாத்திரை சாப்பிட்ட 19 மாணவர்கள் மற்றும் 24 மாணவிகள் என 43 பேருக்கு தலைச்சுற்றல், வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, காரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web