44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!! தமிழக அரசு அதிரடி!!

 
ஐபிஎஸ்

தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சாதனை விளக்க கூட்டங்கள் நடைபெறும் அதே நேரத்தில் நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக  44 ஐபிஎஸ் அதிகாரிகள் இன்று அதிரடியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பை அரசாணையாக வெளியிட்டுள்ளது.மொத்தம் 44 ஐபிஎஸ் அதிகாரிகளை திடீர் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,  தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ்

கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜியாக தேன்மொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு போலீஸ்
இவரைத்தொடர்ந்து காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப்படை ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் திண்டுக்கல், மதுரை ராமநாதபுரம் எஸ்.பிக்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.நேற்று சென்னையில் 32 காவல் ஆய்வாளர்கள் ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்து சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘சென்னை மாநகர காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கத்துடனும், மேலும் தேவைப்படும் சமயங்களில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்’’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web