நாளை 44 புறநகர் ரயில்கள் ரத்து... கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்!

 
கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

நாளை  பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வரும் காரணத்தினால் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் வழிதடத்தில் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவிலான புறநகர் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள இதுதொடர்பாக  அறிக்கையில், "வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ரயில்வே தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இரு மார்க்கத்திலும் சுமார் 44 மின்சார அணைகள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்

பொதுமக்கள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கவும், மெட்ரோ ரயில்களைக் கூடுதலாக இயக்கவும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது வாரமாக ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிக்காக இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேருந்து

நாளை காலை 10 மணி முதல் மாலை 3.30 வரை சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயங்கும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web