இன்றே கடைசி... 4451 வங்கிப் பணியிடங்கள்!! உடனே விண்ணப்பியுங்க!!
இந்தியா முழுவதும் பல்வேறு வங்கிகளில் 4,451 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் உடனே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1402 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் மற்றும் 3,049 PO பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, கொள்ளலாம். இவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.ibps.in-ல் விண்ணப்பித்து பயனடையலாம். விண்ணப்பங்கள் அனுப்பிய பிறகு இந்தப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் டிசம்பர் மாதம் 30, 31ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வுகள் ஜனவரி 28, 2024ல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!