தாலி மஞ்சள் வாசம் கூட மாறலையே... . திருமணமாகி 45 நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை...கதறித் துடித்த கணவன்... !!

 
காயத்ரி

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் மேலத்தெரு மந்தவிளையில் வசித்து வருபவர் நடராஜன்.   37 வயதாகும் நடராஜன்  கன்னியாகுமரியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.  கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் வசித்து வருபவர்  பாண்டு. இவரது  மகள்  32 வயது காயத்ரி.  இவருக்கு நடராஜனுடன்   அக்டோபர்   27ம் தேதி கன்னியாகுமரி  கோவிலில் பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன்  திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஒன்றரை மாதங்கள் கூட இன்னும் ஆகவில்லை. இந்நிலையில்  டிசம்பர் 12ம் தேஎதி   செவ்வாய்கிழமை இரவு காயத்ரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்   திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை


வீட்டுக்கு வந்த நடராஜன் தனது மனைவி காயத்ரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறித் துடித்தார். அவருடைய அழுகை குரல் கேட்டு  அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து   உடடினயாக   காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் காயத்ரியின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆன 45 நாளில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டதால்  ஆர்டி ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

ஆம்புலன்ஸ்

 அவருடைய தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்  தற்கொலை செய்த அறையில் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா? என போலீசார் வீடு முழுவதும் சோதனை செய்து பார்த்தனர். ஆனால் கடிதம் ஏதும் சிக்கவில்லை.தற்கொலைக்கு முன்பு காயத்ரி குடும்பத்தில் பிரச்சினை ஏதும் நடந்ததா? இல்லை வேறு ஏதேனும் தற்கொலைக்கு காரணமா? என பல்வேறு கோணங்களில்   தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது   திருமணமான  சிலவாரங்களிலேயே  புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது  கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web