காசா கிராண்ட் மோசடி... வீடே வேணாம்... காசைத் திருப்பி கொடுங்க... 450 குடும்பங்கள் முற்றுகை!

 
காசாகிராண்ட்

சென்னையில் திரும்பும் திசையெல்லாம் மல்ட்டிப்பிளக்ஸ் காம்ப்ளக்ஸ்களும், வானளாவ பெரு நிறுவனங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளும் என கான்கிரீட் காடாக மாறிவிட்டது. இதில் ஆறு, ஏரி, குளம், குட்டை என எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் அதற்கும் கமிஷன் கொடுத்து  வீடுகட்டும் உரிமத்தை வாங்கிவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கத்தினர் தான். அந்த வகையில் பிரபலமான காசா கிராண்ட் நிறுவனம் திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டியுள்ளது.  450க்கும் அதிகமான குடித்தனக்காரர்கள் இங்கு வசித்து வரும்நிலையில் அவர்களுக்கு இன்னும் பட்டா சிட்டா உட்பட எந்த பதிவு சான்றுகளும் வழங்கப்படவில்லை.

பொதுமக்கள்

இதனால் குடியிருப்புவாசிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்  “  2018 முதல் என்னோட இஎம்ஐ தொகையை கட்டி வருகிறேன். ரூ25 லட்சம்  கொடுத்து இந்த புரோஜக்டை வாங்கியிருக்கேன். ஆனா, இன்றைக்கு வரைக்கும் என்பெயரில் பத்திரப்பதிவு செய்து தரல.  வாடிக்கையாளர்களுக்கு பதிவு செய்து கொடுக்க முடியாது என்பது   2019லேயே  நிறுவனத்துக்குத் தெரியும். அதுக்கு அப்புறம் கூட விற்பனை களைகட்டிச்சு.  மொத்தமாக இங்க  450 வாடிக்கையாளர்கள் இருக்காங்க. அவங்க எல்லாத்துக்குமே இதே பிரச்னைதான். சில பிளாக்குக்கு மட்டும் பதிவு நடந்த நிலையில் அதுவும் செல்லுபடியாகாதுன்னு  சொல்லிட்டாங்க.   நாங்க இஎம்ஐ கட்றோம். வாடகை வீட்லேயும் இருக்கோம். இதுவரை ஒரு தடவை கூட எம்டி எங்களை சந்திக்கவில்லை.

 

காசாகிராண்ட்
அவரிடம்தான் எங்களுக்கான தீர்வு உள்ளது.  , நாங்க அவர்கிட்டதான் பணத்தை கொடுத்திருக்கோம். எனக்குத் தேவை என்னோட பணத்தை திருப்பிக் கொடுத்திருங்க.  பெரிய கும்பிடா போட்டுட்டு போயிடுறேன். வீடே வேண்டாம்” என்கிறார்.  இங்கு சுமார் 30   முதல் 50 லட்சம் வரை  பணம் கொடுத்து பிளாட் வாங்கியவர்கள் குடியேறி  2  ஆண்டுகள் ஆன பிறகும்  அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.  சுமார் 350 பேருக்கு பட்டா வழங்கப்பட வேண்டிய நிலையில், 40 முதல் 50 கோடி வரை பணம் தர வேண்டியிருப்பதாக தெரிகிறது. விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்கின்றனர் குடியிருப்புவாசிகள்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web