சைபர் மோசடி வழக்குகளில் ரூ.46 லட்சம் பணம் மீட்பு... உரியவர்களிடம் ஒப்படைப்பு!

 
சைபர் க்ரைம்
 

தூத்துக்குடியில் பல்வேறு சைபர் குற்ற வழக்குகளில் மோசடி செய்யப்பட்ட ரூ.46 லட்சம் பணம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், போலி அரசு வேலை, டிஜிட்டல் அரஸ்ட் போன்ற பல்வேறு சைபர் குற்ற மோசடி வழக்குகளில் பணம் அனுப்பி பாதிக்கப்பட்ட 22 நபர்கள் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் ‘சைபர் தடய ஆய்வகம்’

மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்   உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர்  சாந்தி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொழில்நுட்பரீதியாக விசாரணை மேற்கொண்டு, மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகளை கண்டறிந்து அவற்றை முடக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு மேற்படி வழக்குகளில் மொத்தம் ரூபாய் 46,24,350/- பணத்தை திரும்ப பெறப்பட்டு மீட்கப்பட்டது.

சைபர்

அதன்படி மீட்கப்பட்ட பணத்தை இன்று (15.10.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்   மேற்படி பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை பல்வேறு சைபர் குற்ற மோசடி வழக்குகளில் மொத்தம் ரூபாய் 1கோடியே 23 லட்சம் பணம் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?