வீடியோ... திருப்பதியில் 4 வது சிறுத்தை பிடிபட்டது!!

 
சிறுத்தை

திருமலை திருப்பதி தேவஸ்தானம் உலக பிரசித்தி பெற்றது. இங்கு  திருமலை அடிவாரத்தில் இருந்து அலிபிரி நடைபாதையில் நடந்து வந்து சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வனப்பகுதி என்பதால் இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம். கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வந்த சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்விச் சென்றது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதன் பிறகு பாத யாத்திரை செல்பவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருந்தாலும் பக்தர்கள் அச்சத்துடனே சென்று வந்தனர்.


இதனையடுத்து தேவஸ்தானமும்  வனத்துறையும் இணைந்து சிறுத்தையை பிடிக்கும்  முயற்சியில் ஈடுபட்டன.  ஆகஸ்ட் 11ம் தேதி ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்ற போது அவரது மகள் லட்சிதாவை சிறுத்தை இழுத்து சென்றது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீஸார் மற்றும் வனத்துறையினர் சிறுமியை தேடினர். இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுமியின் உடலை வனத்துறையினர் மீட்டனர்.

இதே போல ஒன்றரை மாதத்திற்கு முன்பு  பெற்றோருடன் நடந்து சென்ற  3  வயது சிறுவனை சிறுத்தை தாக்கி வனப்பகுதியில் இழுத்துச் சென்றது. அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியரால், சிறுவன் மீட்கப்பட்டான். சிறுத்தை தாக்கியதால் படுகாயம் அடைந்த சிறுவனை மீட்ட போலீஸார், திருப்பதியில் உள்ள தேவஸ்தான குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுத்தை புலி
இதனையடுத்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக திருப்பதி மலையில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கூண்டுகளை அமைத்துள்ளனர். அந்த கூண்டில் ஜூலை 22ம் தேதி ஒரு சிறுத்தையும்,   ஆகஸ்ட் 14- தேதி மற்றொரு பெண் சிறுத்தையும்,   ஆகஸ்ட் 17ம் தேதி மூன்றாவதாக ஒரு சிறுத்தையும் பிடிபட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை  4 வதாக ஒரு சிறுத்தை பிடிபட்டுள்ளது. இந்த சிறுத்தையை திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சிறுத்தைகள் அனைத்தும் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் பக்தர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web