5 சிறாருக்கு ஹெச்ஐவி தொற்று ... மருத்துவமனை அலட்சியம் !

 
எச்ஐவி

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சாய்பாசா சதார் மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறாருக்கு ரத்தம் செலுத்தப்பட்டபின், அவர் ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டதாக குடும்பம் புகார் அளித்தது. இதையடுத்து மாநில அரசு, சுகாதாரப் பணிகள் இயக்குநர் தினேஷ் குமார் தலைமையில் ஐவர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது.

ஆய்வின் போது, சிறாருக்கு ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதும், மேலும் நான்கு தலசீமியா சிறார்களும் இதே காரணத்தால் பாதிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. ரத்த வங்கியின் அலட்சியம் காரணமாக மொத்தம் ஐந்து சிறார்களுக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது என விசாரணை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, முதல்வர் ஹேமந்த் சோரன், சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், அவர்களுக்கான சிகிச்சை செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரத்த வங்கிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, ஐந்து நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!