மாலியில் 5 இந்திய தொழிலாளர்கள் கடத்தல்!
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் 5 இந்திய தொழிலாளர்களை கடத்திச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலியின் கோப்ரி நகரில் உள்ள தனியார் மின்சார நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியர்கள் மீது இந்த தாக்குதல் நடந்தது.
நவம்பர் 6ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், அடையாளம் தெரியாத கும்பல் ஆயுதத்துடன் வந்து தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்திற்குப் பிறகு, பமாகோவில் உள்ள நிறுவனத்தின் மற்ற இந்திய பணியாளர்கள் உடனடியாக பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டனர். இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் இந்த கடத்தலுக்குப் பொறுப்பேற்கவில்லை.

மாலியில் தற்போது ராணுவ ஆட்சி நிலவி வரும் நிலையில், அல்-கயிதா மற்றும் ஐ.எஸ். தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகள் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. வெளிநாட்டினரை கடத்தி பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
