உ.பி.யில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 5 பேர் பலி... முதல்வர் யோகி இரங்கல்!

 
குண்டு வெடிப்பு வெடி விபத்து வெடிகுண்டு
உத்தரப் பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் ஷிகோஹாபாத் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நௌஷேரா பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் நேற்று இரவு இந்த வெடிப்பு விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு மற்றம் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் குழு நிவாரணப் பணியில் ஈடுபட்டனர். 

பட்டாசு குடோனில் நடந்த விபத்து குறித்து உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை