சூப்பர்... 5 லட்சம் வேலை வாய்ப்புக்கள்... தீபாவளி சரவெடி ஆபர்... !!

 
மீஷோ

நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள். இதற்காக வணிக நிறுவனங்கள் வியாபாரத்தை பெருக்க இப்போதே பெரும் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில்  இந்தியாவின் முண்ணனி ஈகாமர்ஸ் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது  மீஷோ. மிகவும் பிரபலமான ஈ-காமர்ஸ் நிறுவனமான மீஷோ, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.  இக்காலகட்டத்தில் பதிவாகும் அதிகப்படியான வர்த்தகத்தைச் சமாளிக்க மீஷோ நிர்வாகம் சில முக்கியமான முடிவுகளை  எடுத்துள்ளது.

மீஷோ

அதன்படி   பண்டிகை கால வர்த்தகத்தைப் பூர்த்தி செய்ய விற்பனையாளர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நெட்வொர்க்கில் கிட்டத்தட்ட 5 லட்சம் ஊழியர்களை பணியில் அமர்த்த உள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கள் அனைத்துமே சீசனல் தான்.  பகுதி நேர வேலை பிரிவில் பணி தேடும் அனைவருக்கும் இது மாபெரும் ஜாக்பாட் ஆக அமையும். கடந்த வருடன் உருவாக்கிய இத்தகைய   சீசனல் வேலை வாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 50 சதவீதம் கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.  அனைத்துத் தரப்பு வர்த்தகப் பரிவுகளும் இந்தப் பண்டிகை கால விற்பனைக்குத் தயாராகி வரும் வேளையில் டெலிவரி, லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் ஊழியர்களை அதிகளவில் சேர்க்கத் திட்டமிட்டு வருகிறது. இதில் மீஷோ திட்டமிட்டு உள்ள 5 லட்சம் வேலைவாய்ப்புகளில் சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் தன்னுடைய டெலிவரி பார்ட்னர்கள் மூலமாக தேர்ந்தெடுக்க உள்ளது. அதன்படி Ecom Express, DTDC, Elastic Run, Loadshare, Delhivery, Shadowfax போன்ற நிறுவனத்தின் மூலம் அதிக வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.  

மீஷோ

இந்த 2 லட்ச வேலைவாய்ப்புகளில் 60 சதவீதம் 3ம் , 4ம் தர நகரங்களில் அமையலாம் என மீஷோ தெரிவித்துள்ளது.  மீதமுள்ள 3 லட்சம் வேலைவாய்ப்புகள்  மீஷோ தளத்தில் இருக்கும் விற்பனையாளர்கள்.  அதே நேரத்தில் மீஷோ தளத்தில் இருக்கும் விற்பனையாளர்களில் சுமார் 80 சதவீதம் பேர் புதிய பொருட்களை இந்தப் பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  பல விற்பனையாளர்கள் பேஷன் பொருட்கள் மற்றும் ஹோம் டெக்கார் பிரிவில் இந்தப் பண்டிகை கால விற்பனைக்காக களம் இறங்க உள்ளனர்.  இந்நிலையில் இந்த 500000 ஊழியர்களுக்கான வேலைவாய்ப்புகளை மீஷோ நேரடியாக உருவாக்கவில்லை.  மீஷோ சார்ந்து இருக்கும் விற்பனையாளர்கள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் உருவாக்குகிறது.  பண்டிகை காலத்தில் டெலிவரி முதல் கிடங்குகள் வரையில் அனைத்து பிரிவுகளிலும் தற்காலிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதனால் கிக் ஊழியர்கள், ப்ரீலன்சர் ஊழியர்கள் தேவை அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web