அதிகாலையில் அதிர்ச்சி... காரும் டேங்கர் லாரியும் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடுத்தடுத்து பலி... !!

 
விபத்து

கோவையிலிருந்து திருப்பூர் வழியாக பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் எதிர்த்திசையில்   கோவை  பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து   பழனிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.தாராபுரத்தை அடுத்த மனக்கடவு அருகே டேங்கர் லாரியும், காரும் மோதி எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

விபத்து

 

இந்த கோர விபத்தில் 4பேர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கலாராணியை மீட்டு அக்கம்பக்கத்தினர்  ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கலாராணி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்

 

இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்க்கொண்டனர். அதில்  உயிரிழந்தவர்கள் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம்   தமிழ்மணி ,  மனைவி சித்ரா , தாராபுரம்  பாலகிருஷ்ணன்,   இவரது மனைவி செல்வராணி ,  திண்டுக்கல்  கலாராணி என்பது தெரிய வந்துள்ளது. சாலை விபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு திரும்பிய போது இவர்கள் அனைவரும் அடுத்தடுத்து விபத்தில் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web