ஒரே நாளில் 5 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. பெரும் சோகம்!

 
தண்டவாளம்

பிரச்சனைகளை சமாளிக்க வேண்டுமே தவிர விபரீதமான முடிவுகளை எடுப்பதால் இருப்பவர்களுக்கு தான் சிக்கல். எந்த விஷயத்திற்கும் தற்கொலை தீர்வு கிடையாது. இதுவும் கடந்து போகும் என்ற மனோபாவத்துடன் அதனை கடந்து விட்டால் வாழ்வு பழைய மாதிரியே மீண்டும் ஆகிவிடும். எல்லாம் சில காலம் தான் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். 
தமிழகத்தில் இருவேறு சம்பவங்களில் 5 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

ரயில் தண்டவாளம்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பாரத் நகரில் வசித்து வருபவர் 42 வயது   ராஜேஷ்.  இவர்  கோவை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி ஆர்த்தி, 40; தனியார் வங்கி ஊழியர். இவர்களின் மகள்கள் ஆருத்ரா, 11, சுபத்ரா, 7 எனத் தெரிகிறது.நேற்று பிற்பகல்  ஆர்த்தி, பாபநாசத்தில் தோழி வளைகாப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு,  2 மகள்களுடன் உத்தாண பகுதியில், கண்களை கட்டிக்கொண்டு   ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கும்பகோணம் ரயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

ரயில் தண்டவாளம்
இதே போல, திருவிடைமருதுார், கட்டளை தெருவில் வசித்து வரும்  ராஜேந்திரன் மனைவி ரேவதி, 50, மகள் மகேஸ்வரி, 30, ஆகியோர் நேற்று மாலை மயிலாடுதுறையில் இருந்து மைசூரு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web