ஸ்டார் ஹோட்டல்களில் மதுபான பார்களை மூட உத்தரவு... ஆய்வில் சிக்கிய 5 தனியார் சொகுசு ஹோட்டல்கள்!
சென்னையில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த ஐந்து தனியார் நட்சத்திர ஓட்டல்களின் பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல், ஹையத் ரீஜென்சி, தி பார்க் ஆகிய 5 தனியார் நட்சத்திர ஓட்டல்களில் அரசு உரிமத்தின் கீழ் F.L.3 மதுக்கடைகள் இயங்கி வந்தன. இதில் சட்டவிதிமுறைக்கு எதிராக பல குற்றங்கள் நடந்து வருவதாக புகார் எழுந்தது.

குறிப்பாக, வெளியாட்களை மது அருந்த அனுமதிப்பது, மது வினியோகம் செய்தல் போன்ற குற்றங்கள் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது. இதையடுத்து மதுவிலக்கு மற்றும் ஒழுங்குமுறை ஆணையர் எப்.எல்.3 (F.L.3) தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். 5 நட்சத்திர ஓட்டல்களில் மதுபான பார்களை உடனடியாக மூடவும் உத்தரவு பிறப்பித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!
