திருப்பதியில் 5வதாக மற்றொரு சிறுத்தை!!பக்தர்கள் அதிர்ச்சி!!

 
சிறுத்தை

உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதிக்கு வருடத்தின் அனைத்து நாட்களும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  அதில் பலர் அடிவாரத்திலிருந்து நடைபாதையாக திருமலையை அடைவது வழக்கம். முழுவதுமாக வனப்பகுதி என்பதால் வனவிலங்குகளில் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில்  கடந்த சில வாரங்களுக்கு முன் பக்தர்களில் சிறுவன் ஒருவரை சிறுத்தை இழுத்து சென்றது.அதன் பிறகு சில நாட்களிலேயே சிறுமியையும் இழுத்து சென்றது. அடுத்தடுத்த உயிரிழப்புக்கள் திருப்பதி செல்லும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுத்தை

இதனையடுத்து நடந்து செல்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்துடன்  சிறுத்தையின் நடமாட்டத்தை ஒழிக்க கூண்டுகள் வைக்கப்பட்டன. இதில் இதுவரை  4 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டு உயிரியல் பூங்காவில் விடப்பட்டன இந்நிலையில் நேற்று 5 வதாக ஒரு சிறுத்தையின் நடமாட்டம் இருந்ததை கண்டு அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் விடுத்த செய்திக்குறிப்பில்  அன்னமய்யா பவனில் நேற்று அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சிறுத்தை புலி

இதில் தலைமை தாங்கிய திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா, “இதுவரை 4 சிறுத்தைகள் பிடிபட்டதால் இனி இப்பகுதியில் சிறுத்தைகள் இருக்காது என்று நினைத்தோம். இந்நிலையில் மேலும் ஒரு சிறுத்தை, கூண்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில் வந்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது” எனக் கூறியுள்ளார்.   இதுவரை 4 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிபட்ட நிலையில், 5வதாக மேலும் ஒரு சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மலைப்பாதை வழியே திருமலைக்குச் செல்லும் பக்தர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web