காலில் விழுவது தான் திராவிட அரசியலா? 50 வயதான எம்.எல்.ஏ. துணை முதல்வரிடம் ஆசிர்வாதம்!

 
kaalil
 

திமுக  சுயமரியாதை அரசியல் செய்து வருவதாக கூறிவருகிறது.  சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து, பகுத்தறிவு மற்றும் சமூக நீதிக்காக போராடியதன் அடையாளமாகவே தன்னை நிலைநாட்டியது. ஆனால், இப்போது அந்த கொள்கைகளுக்கு முரணான ஒரு காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது — அதாவது, 60 வயதான திமுக எம்எல்ஏ ஒருவர், 50 வயதான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்து வணங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Stalin

திண்டுக்கல்லில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில்  வேடசந்தூர் தொகுதி எம்எல்ஏ காந்தி ராஜன், பொதுமன்றத்தில் வணக்கம் சொல்ல வந்த போது  உதயநிதியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இது குறித்து பலர் “இது தான் திமுகவின் சுயமரியாதையா?” என கேள்வி எழுப்பி, சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஒரு பக்கம் ஜெயலலிதா காலத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் காலில் விழுந்ததை திமுக கடுமையாக விமர்சித்தது. இன்று அதே செயலில் திமுக நின்றுவிட்டது என்பதே இதன் தாக்கம்.

உதயநிதி
6 ஆண்டுகளில் துணை முதல்வர் பதவி — சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இவ்வாறு கீழ்மட்டத்தில் நடந்து கொள்வது சுயமரியாதை அரசியலுக்கே களங்கம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இது ஒரு தனிப்பட்ட மரியாதை செயல் என்றாலும், அது பொதுமக்கள் மத்தியில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக கட்சி தலைவர்கள் கூறிவருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?