500 செவிலியர்களை அலேக்காக தூக்கி அதிரடி கைது... பரபரக்கும் சென்னை!!

 
செவிலியர் போராட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன் இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உட்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரம் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் டிபிஐ வளாகத்தில் நடைபெற்றது. பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என தொடர்போராட்டம் நடத்தினர்.

செவிலியர் போராட்டம்

இதனையடுத்து அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்ட  அனைவரையும் குண்டுகட்டாக தூக்கி சமுதாயகூடத்தில் சிறை வைத்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. அந்த வரிசையில் தற்போது பணி நிரந்தரம் செய்வது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நிரந்தர பணியிடங்களை உருவாக்குவது உட்பட   11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செவிலியர்  போராட்டம் நடத்தினர்.

செவிலியர் போராட்டம்

இவர்கள் அனைவரையும் போலீசார்   கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது  எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றும், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும் காவல்துறை வாகனத்தில் ஏற்றிக் கைது செய்தனர். சுமார் 500 செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இவர்கள் கைது செய்யப்பட்டதில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web