50000 கர்ப்பிணிகள் தண்ணீர், மின்சாரம் உணவின்றி தவிப்பு.. இஸ்ரேலில் அவலம்!!

 
இஸ்ரேல்

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே 6 வது நாளாக தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது இஸ்ரேல் மீது பாலஸ்தீன  ஹமாஸ் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்ல் இஸ்ரேல் காசா பகுதி மீது பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த  தொடர் தாக்குதல் காரணமாக இருதரப்பிலும் 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன .  காசாவை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், காசா நகரில் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - காசா இடையே போர்

காசா நகரில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.  மின்சாரம் இல்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர்.ஹமாஸ் அமைப்பினர்  இஸ்ரேல் ராணுவத்தினர், முதியவர்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோரை பணயக்கைதியாக பிடித்துவைத்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை, காசா நகரத்திற்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் எதுவும் வழங்கப்படமாட்டாது என இஸ்ரேல்  அதிரடியாக அறிவித்துள்ளது.  

இஸ்ரேல்
ஏற்கனவே, இஸ்ரேல் – ஹமாஸ் குழு இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு அழைப்பு விடுத்துள்ளது. காசா நகரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.  பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை சர்வதேச நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில்  இஸ்ரேல் படையினர் காசா பகுதியில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அங்கிருந்து 3.4 லட்சம் பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.  இவர்கள் அனைவரும்   எல்லைப்பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இந்நிலையில் காசா நகரில் 50000   கர்ப்பிணிகள் தண்ணீர் மின்சாரம் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருவதாக  ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் தாக்குதலால் காசா நகரில் 50000கர்ப்பிணிகள் உணவு, குடிநீர், சுகாதாரம், மின்சாரம்  என அடிப்படை தேவையின்றி   மிக மோசமான சூழ்நிலையை  எதிர்கொண்டு வருகின்றனர். இது போன்ற ஒரு மோசமான சூழலை கடந்த 10 ஆண்டுகளில் பார்த்ததில்லை என வேதனை தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web