பகீர்... படகு கவிழ்ந்து 52 பேர் பலி... 167பேர் மாயம்..!!

 
படகு

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று  காங்கோ. இங்கு   சாலை வசதிகள்  மிகக்மிக குறைவு . இதனால் பெரும்பாலும்  நீர்வழிப் போக்குவரத்து தான்.  குறிப்பாக காங்கோ ஆற்றில் ஏராளமான பயணிகள் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் ஒரு படகில் சுமார் 300க்கும் மேற்பட்டோர்  பயணித்துக் கொண்டிருந்தனர்.  அதிக பாரம் ஏற்றியதால் இந்த படகு பாண்டாகா  பாரம் தாங்காமல் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் பயணித்தவர்களில்  சுமார் 167 பேர் மாயமாகியுள்ளனர்.

படகு


 சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில்  இதுவரை 52 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிக அளவிலான பயணிகளை படகில் ஏற்றி சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. 

படகு


படகுகளை இயக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும் கட்டுப்பாடுகளை மீறி  படகு இயக்குபவர்கள்  அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதன் காரணமாக, காங்கோ ஜனநாயக குடியரசில், அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web