53 விமானங்கள் ரத்து... ரயில்கள் 6 மணி நேரம் தாமதம்... கதியின்றி தவிக்கும் பயணிகள்... !

 
விமானம்

இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன்  காரணமாக 170-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 20 ரயில்கள் தாமதமாகியுள்ளன. ரயில் விமான பயணிகள் செய்வதறியாமல் விமான மற்றும் ரயில் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர்.  இதன்படி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்ப வேண்டிய 120 விமானங்களின் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

 53 விமானங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன.    53 விமானங்களில் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களும் அடங்கும் என்பதால் அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்திருந்த வெளிநாட்டு பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனிடையே கடும் பனிமூட்டத்தால் 20 ரயில்களின் புறப்படும் நேரமும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. வடக்கு ரயில்வே தகவலின்படி ரயில்கள் சுமார் 6 முதல் 6:30 மணி நேரம் வரை தாமதமாக புறப்படுவதாக அறிவித்துள்ளது.  

இந்தியாவின் வடமாநிலங்களில்  கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அதிகாலையில் எந்த திசையில் திரும்பினாலும்  புகைமூட்டம்போல் காட்சியளிக்கிறது. அதிலும்  கடந்த சில வாரங்களாக, நிலவி வரும் அடர் பனிமூட்டத்தால் ரயில், விமான சேவைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பணிக்கு செல்பவர்கள் பள்ளி கல்லூரிகளுக்குசெல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றன. 
குறிப்பாக டெல்லி, பஞ்சாப்,உத்தரப்பிரதேசம்,ஹரியாணா   மற்றும்  வடகிழக்கு மாநிலங்களிலும் அதிகாலை நேரத்தில் கடும் பனி மூட்டம் காரணமாக    மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.  குளிரை போக்க நெருப்பு மூட்டி குளிர் காய்கின்றனர்.

பனிமூட்டம்


இதனையடுத்து விமானங்கள் தரையிரங்க முடியவில்லை.  இன்று  டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 30 விமானங்கள் தாமதமாகின. 17 விமானங்கள்  முழுமையாக ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் புறப்பாடு, தரையிறங்குவதில் தாமதம் இவைகளால்  பயணிகள்   மணிக் கணக்கில் காத்துக்கிடக்கின்றனர். இதே போல் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்  “பஞ்சாப் தொடங்கி இந்தியாவின்  வடகிழக்கு மாநிலங்கள் வரை அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லி, ஹரியாணா, வடக்கு மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்குவங்க மாநிலங்களில்  கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.

பனிமூட்டம்

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் “இன்றும் நாளையும் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. அதன்படி அடுத்த 48 மணி நேரத்திற்கு குளிர்ந்த காற்றும், அடர்ந்த பனிமூட்டமும்  நிலவும்.  இன்று காலை  நிலவரப்படி டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியசாக இருந்தது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் பனிமூட்டத்தால் நேற்று 5 விமானங்கள் வேறு மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.  100 விமானங்கள் தாமதமாகச் சென்றன.  ரயில் சேவையை பொறுத்தவரை  30 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டன.  இதனால் பொதுமக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

 தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web